நடிகர் சிம்பு நீண்ட காலத்திற்கு பிறகு நேற்று இரவு ஒரு பிரபல கல்லூரியின் கல்ச்சுரல் விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு கொடுத்துவரும் அன்பு பற்றி உருக்கமாக பேசினார்.
‘பார்முலா 1 ரேஸ் பாத்திருப்பீங்க. அதில் இடையில் ஒரு பிரேக் எடுப்பார்கள். டயர் மாற்ற, fuel refill செய்வது என பல விஷயங்கள் செய்வார்கள். அதுபோல நானும் வாழ்க்கையில் சின்ன பிரேக் எடுத்தேன். ஆனால் மீண்டும் ட்ராக்கில் நுழைந்தால் வண்டி எப்படி ஓடும் என்பது உங்களுக்கு தெரியும். இப்போ தான் மாநாடு துவங்கியிருக்கேன். இனி தொடர்ந்து நடிப்பேன்.’
‘எனக்கு படங்கள் கிடைப்பதை தடுக்கவே ஒரு கூட்டம் வேலை செய்கிறது. நீங்கள் (ரசிகர்கள்) இப்படி எனக்கு அன்பு கொடுத்தால் அவங்களுக்கு காண்டாகுமே’ என கூறினார்.
மேலும் பேசிய சிம்பு, ‘சிம்பு ரசிகன்னு பசங்க சொன்னா தைரியமா கண்ணமூடிட்டு அவன லவ் பண்ணுங்க. ஊரே என்னை கழுவு ஊற்றும் போது ‘என் தலைவன் திரும்ப வருவான்’னு எனக்கு ஆதரவா நிக்குறான்னா, அவன் கட்டுன பொண்டாட்டிக்கும் லவ் பண்ற பொண்ணுக்காகவும் எப்படி நிப்பான்னு யோசிச்சு பாருங்க’ என கூறியுள்ளார்.