கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமைப்பது, வீட்டு வேலை செய்வது என நேரத்தை செலவிடும் பிரபலங்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கினார். பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியிருந்தார். அவரின் சவாலை ஏற்று ராஜமவுலி இந்த சவாலை செய்தார்.
பின்னர் ராஜமவுலியின் சவாலை ஏற்று வீட்டுவேலை செய்த ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவிக்கு சவால்விட்டார். இதனை ஏற்று வீட்டை சுத்தம் செய்தது மட்டுமில்லாமல், தனது தாயாருக்கு தோசை சுட்டு கொடுத்து அசத்தினார் சிரஞ்சீவி. இதுபோன்று செய்து வீடியோ பதிவிடுமாறு அவர் ரஜினிகாந்திற்கு சவால் விட்டுள்ளார். சிரஞ்சீவியின் சவாலை ரஜினி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Here it is Bheem @tarak9999 నేను రోజు చేసే పనులే…ఇవ్వాళ మీకోసం ఈ వీడియో సాక్ష్యం. And I now nominate @KTRTRS & my friend @rajinikanth #BeTheRealMan challenge. pic.twitter.com/y6DCQfWMMm
— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 23, 2020