பிரியமானவளே சீரியலில் அன்பான, பொறுப்பான, அக்கறையான மாமியாராக தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை பிரவீணா. மலையாள நடிகையான இவர் தமிழில் வெற்றி வேல், தீரன், சாமி 2, கோமாளி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மகராசி சீரியலிலும் நடித்து வருகிறார். கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் உள்ள கோழிக்கூட்டில் நல்ல பாம்பு ஒன்று திடீரென உள்ளே புகுந்தது. இதனால் பயந்து போன அவர் அருகில் உள்ள பாம்பு பண்ணைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பண்ணை ஊழியர்கள் உடனே வீட்டை சோதனையிட்ட போது பாம்பு கிடைக்கவில்லை. ஆனால் பிறந்த சில நாட்களே ஆன பாம்பு குட்டி இருப்பதை கண்டு அதை பத்திரமாக பிடித்தனர்.
முதலில் அதை கையில் பிடிக்க பிரவீணா பயந்தார். பின் அதை அழகாக கையில் பிடித்த போது அந்த பாம்பு குட்டி படமெடுத்து ஆடியது.