Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு உண்மை காரணம் இதுதானாம்- நண்பர் கூறிய தகவல்

tv actress jayashree rao and eshwar

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் என போலீசில் புகார் அளித்தார்.

பின் அவரது கணவர் ஈஸ்வர், ஜெயஸ்ரீ மீதே சில புகார்கள் அளித்தார், இடையில் நடிகை மகாலட்சுமியும் இந்த பிரச்சனை குறித்து பேட்டிகள் கொடுத்தார்.

இந்த நேரத்தில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் நடிகை ஜெயஸ்ரீ. இவரது தற்கொலையின் உண்மை காரணம் பற்றி அவரது நண்பர் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், ஜெயஸ்ரீ கணவர் பக்கத்தில் இருந்து அவருக்கு நிறைய அழுத்தம் கொடுக்கிறார்கள்.

அவர் மீது அபாண்டமாக பாழிகள் போட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

போகி அன்றைக்கு கூட கோவிலுக்கு சென்ற அவரது காரை மறைந்தது யாரை கேட்டு இந்த காரை பயன்படுத்துகிறீர்கள் என சில விஷயங்கள் கூறி மிரட்டியிருக்கிறார்கள்.

பல பக்கங்களில் இருந்து பிரச்சனை வரவே அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.