சூப்பர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவ்வருடத்தின் தொடக்கமாக பொங்கல் ஸ்பெஷலாக தர்பார் படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றியை பதிவு செய்து விட்டார்.
அண்மைகாலமாக அவரின் பேச்சு குறித்த சர்ச்சைகள் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. தற்போது அவர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.
தர்பார் படத்தின் வசூல் குறித்த விமர்சனங்களும் எடுத்துவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.