Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவின் அடுத்தபட நாயகி இவரா?

Suriya

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே துவக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இப்படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 39வது படமாக உருவாகும் இதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டுள்ளது.

இயக்குனர் ஹரி தற்போது நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.