ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ஜே.ஜே.பிரடரிக் என்ற புது டைரக்டர் இயக்கியுள்ள படம், ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளிப்போய் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு இணையதள நிறுவனம் ரூ.9 கோடி கொடுத்து வாங்கி, இணையதளத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.
தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ உள்பட பல படங்களை தயாரித்த பட அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறுகையில், “படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம். முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா? என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது நியாயம் அல்ல. தயாரிப்பாளரை மிரட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்.
#PonMagalVandhal திரைப்படம் @PrimeVideoIN வெளியாக இருக்கும் செய்தி மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துகள் @2D_ENTPVTLTD @Suriya_offl பட தயாரிப்பும் ஒரு வியாபாரம் அதில் தொழில் சுதந்திரம் தேவை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் எண்பது
தயாரிப்பாளரின் முடிவே #wesupport— JSK தமிழக அரசியல் (@JSKfilmcorp) April 24, 2020