சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வெய்யோன் சில்லி’ பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அப்பாடல் வெளியிட்டு விழாவில் படக்குழுவினர்கள் மற்றும் சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சிவகுமார் நடிகர் சூர்யா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் : ” நடிகர் சூர்யா சைலன்ட்னு நினைச்சிட்டு இருக்கீங்க, ஆனால் அவரு புலி மாதிரி. அந்த புலி பதுங்கி கொண்டு இருக்கிறது, சூரரை போற்று படத்தில் பாயா போகிறது” என நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.