நடிகர் சூர்யா தனது சூரரை போற்று படத்தின் ரிலீசுக்காக தற்போது மிக ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறார்.
சமீபகாலமாக இப்படத்தின் பல அப்டேட்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
மேலும் இப்படத்தின் மீதான மிக பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.
இப்படத்திற்கு பிறகு சூர்யா இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்திருந்தது.
இதன்பின் தனது கூட்டணியை வெற்றி இயக்குனர் திரு வெற்றிமாறனுடன் வாடி வாசல் எனும் படத்தில் இணைந்து கொண்டுள்ளார் நடிகர் சூர்யா.
இந்நிலையில் தற்போது இப்படங்களுக்கு பிறகு சூர்யா டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது.
இந்த படத்தில் சூர்யாவிற்கு வக்கில் கதாபாத்திரம் என்று தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இதுவே இவரது திரையுலக பயணத்தில் முதன் முறையாக வக்கில் கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இதனை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.