பிரபல திரைப்பின்னணி பாடகி சின்மயிக்கு டப்பிங் யூனியனில் மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும் அவர் தற்போது குழந்தைகளுக்கு பாட்டு போட்டி நிகழ்ச்சியை டிவி சானல் ஒன்றில் தொகுத்து வழங்கி வருகிறார்.
அண்மையில் அவர் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து பேசிவந்தார். டிவிட்டர் அடிக்கடி இதுகுறித்து கருத்துக்களை பகிர்ந்து வந்தார். அவர் மீதான விமர்சனங்களை சின்மயி தைரியமாக எதிர்கொண்டு வருகிறார்.
நேற்று தான் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இந்நிலையில் தற்போது சென்னையில் இளைஞர் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, அந்த சிறுமியை 3 மாடியிலிருந்து தூக்கி வீசுயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சின்மயி இதற்கு முடிவே இல்லை. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என பதிவிட்டுள்ளார்.
No end to this. Crimes against children and women continue https://t.co/OtIKqn7mvr
— Chinmayi Sripaada (@Chinmayi) March 21, 2020