Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செல்வராகவனின் அடுத்தப்படம், அவரே அறிவித்த அறிவிப்பு

Selvaraghavan

செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். ஆனால், கடந்த சில படங்கள் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாவதையும் தவிர்க்க முடியாது.

இந்நிலையில் செல்வராகவன் அடுத்து தனுஷை வைத்து படம் இயக்குவதாக ஒரு தகவல் வந்தது.

ஆனால், தனுஷோ இன்னும் 5 வருடத்திற்கு தன் கால்ஷிட்டை புல் செய்து வைத்துள்ளார், ஆம், ராட்சசன் இயக்குனர், மாரிசெல்வராஜ் படம், கார்த்திக் நரேன் படம், ஒரு ஹிந்தி படம் என தனுஷ் படு பிஸியாகவுள்ளார்.

தற்போது செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார், இதில் தன் அடுத்தப்படத்திற்கான கதையை எழுதுவது போல் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அதோடு செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்னும் திரைக்கு வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ,சந்தானத்தை வைத்து இயக்கிய மன்னவன் வந்தானடி பாதியில் நிற்கின்றது.