அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இதில் தமிழ் திரைப்பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், கமல்ஹாசன், தனுஷ், சிறுத்தை சிவா, ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த பட்டியலில் ரஜினி 13-வது இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் 16-வது இடத்திலும், விஜய் 47-வது இடத்திலும், அஜித் 52-வது இடத்திலும், ஷங்கர் 55-வது இடத்திலும், கமல்ஹாசன் 56-வது இடத்திலும், தனுஷ் 64-வது இடத்திலும், சிறுத்தை சிவா 80-வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த முறை தென்னிந்தியாவில் 15 நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை 13 பேர் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.