இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சிலர் களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விமல், நேற்று தனது சொந்த ஊரில் கொரோனா தடுப்பு பணியில் தன்னுடைய கிராமத்து இளைஞர்களுடன் களத்தில் இறங்கினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றதோ, அதே போல் தோளில் ஒரு எந்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.
இதுமட்டுமின்றி வீடுகளின் முன் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. படத்தில் மட்டுமே நடிக்காமல் நிஜவாழ்வில் தன் கிராமத்தில் கொரோனா களப்பணியில் நடிகர் விமல் இறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.