டிவி சானலலில் பொழுதுபோக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் இமான் அண்ணாச்சி. சிறுவர்கள், சிறுமிகளை கொண்டு குட்டிஸ் சுட்டிஸ் நிகழ்ச்சியையும் செய்து வருகிறார். இரண்டுமே வேடிக்கையாகவும், கலக்கலாகவும் இருக்கின்றன. மக்களால் அதிகம் ரசித்து பார்க்கப்படுகின்றன.
இமான் அண்ணாட்சி அவ்வப்போது சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனாவால் இப்போது படப்பிடிப்புகளும் இல்லை. டிவியில் கூட பழைய நிகழ்ச்சிகளே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
ஆனாலும் இமான் அண்ணாச்சியின் காமெடி நிகழ்ச்சிகள் இப்போது பார்ப்பதற்கும் புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன.
இந்நிலையில் கொரோனாவால் வறுமை வாடும் மக்களுக்கும் சினிமா ஊழியர்களுக்கும் பிரபலங்கள் பலர் உதவி செய்துள்ளனர். தற்போது இமான் அண்ணாச்சி சென்னை தாம்பரத்தில் 300 குடும்பங்களுக்கு உணவுப்பொருள் வழங்கி உதவி செய்துள்ளாராம்.