தமிழில் மிகவும் பிரபலமான நடிகை ஸ்ரேயா. இவர் டென்னிஸ் வீரரும், தொழில் அதிபருமான ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகு பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.
அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து படங்களில் நடித்து விட்டு போகிறார். இப்போது தமிழில் விமல் ஜோடியாக சண்டக்காரி என்ற படத்தில் ஸ்ரேயா நடித்து வருகிறார். கொரோனாவால் பார்சிலோனாவிலேயே கணவருடன் தங்கியுள்ளார். வீட்டில் நேரம் போக வேண்டும் என்பதற்காக விட்டு வேலைகளில் ஸ்ரேயாவுக்கு உதவி செய்து வருகிறார் அவரது கணவர் ஆன்ட்ரே.
சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி தருவது அவர்தான். இதை ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. அத்துடன் நிற்காமல், ஜெயம் ரவி, ஆர்யா, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு பாத்திரம் கழுவும் சவால் என அழைப்பு விடுத்துள்ளார். எல்லோரும் இதுபோல் பாத்திரங்களை கழுவுங்கள் என கேட்டிருக்கிறார்.