ஜோதிகா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை. இவர் நடிப்பில் குஷி, தூள், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
நல்ல பீக்கில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்துக்கொண்டார். அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் ஜோதிகா நாம் கோவில்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோமோ, அதை கொஞ்சம் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்வோம் என்றார்.
இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது, சிலர் இதை எதிர்க்க, பலர் இதற்கு ஆதரவு தந்தனர்.
தற்போது ஜோதிகா சொன்னதை கேட்டு ஒரு ஆசிரியை திருப்பதிக்காக வைத்திருந்த ரூ 40 ஆயிரம் பணத்தை தன் பள்ளி ஏழை மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.
