முக்கிய டிவி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் ரியோ ராஜ். இவரின் மனைவி ஸ்ருதி. இந்த ஜோடியை டிவி நிகழ்ச்சிகளில் பலரும் பார்த்திருப்பதால் அனைவரும் அறிவார்கள்.
சிவகார்த்திகேயனின் இரண்டாம் தயாரிப்பாக வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ரியோ ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்தது.
இதனையடுத்து படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவர் தான் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளதாகவும், தாயும் சேயும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். வாழ்த்துக்கள் ரியோ. நாங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்துக்களை பதிவு செய்கிறோம்.
Princess has arrived to rule my world 👸
Yes! Am Blessed with A Baby GIRL👶😘
தாயும் சேயும் நலம் 🤗— Rio raj (@rio_raj) March 6, 2020