நடிகர் தனுஷ் தான் தேர்ந்தெடுக்கும் படங்களை மிகவும் தெளிவாக செய்து வருகிறார்.
கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக நடித்து மக்களிடமும் நல்ல பாராட்டுக்கள் பெற்று வருகிறார். அண்மையில் அவரின் அசுரன் படத்தின் 100வது நாள் கொண்டாட்ட விழா நடந்த நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக அவர் நடித்த பட்டாஸ் படம் வெளியாகி இருந்தது.
படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் வந்திருக்கிறது. முதல் நாளில் மட்டும் படம் சென்னையில் ரூ. 0.51 லட்சம் வசூலித்துள்ளது.
ஆனால் இந்த படத்திற்கு முன் வெளியான தனுஷின் அசுரன் படம் முதல் நாளில் ரூ. 0.52 லட்சம் வசூலித்திருக்கிறது. இப்பட வசூலை விட பட்டாஸ் கொஞ்சம் குறைந்துள்ளது.
சரி இதற்கு முன் வெளியான தனுஷின் 5 படங்களின் முதல் நாள் வசூல் விவரம் இதோ,
அசுரன்- ரூ. 0.52 லட்சம்
எனை நோக்கி பாயும் தோட்டா- ரூ. 0.74 லட்சம்
மாரி 2- ரூ. 0.41 லட்சம்
வட சென்னை- ரூ. 0.81 லட்சம்
வேலையில்லா பட்டதாரி 2- ரூ. 0.48 லட்சம்