தமிழ் சினிமாவில் திருட திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் தனுஷ்.
அண்மையில் இவர் நடித்த வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் கூட மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை அடைந்தது.
இந்நிலையில் சில்லு கருப்பட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நிவேதிதா சதீஷ்.
இவர் அண்மையில் அளித்த பேட்டியில் “எனக்கு நடிகர் தனுஷ் அவர்களுடன் நடிக்க வேண்டும், ஏனென்றால் அவர் முன்னாள் நடிக்கும் போழுது தான் என்னுடைய முழு நடிப்பு திறனும் விழியில் வரும் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய இவர் “நடிகர் தனுஷ் அவர்கள் திரையில் பேசவே தேவையில்லை. அவர் நடித்தாலே போதும், ஏனென்றால் அவர் அப்படிப்பட்ட ஒரு நடிகர் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.