Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தன் மகனை நினைத்து விஜய் உச்சக்கட்ட சோகம்!

vijay

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். 6லிருந்து 60 வரை எல்லோரும் கொண்டாடும் ஒரு நடிகராக விஜய் இன்று வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் விஜய் தற்போது கொரோனாவால் சென்னையில் தான் இருந்து வருகிறார். இவரின் மாஸ்டர் படம் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வெளிவரும் என கூறப்படுகிறது.

தற்போது விஜய் மிகவும் சோகத்தில் இருக்கின்றாராம். ஆம், விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து வருகிறார்.

கொரோனாவால் சஞ்சய் அங்கேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளதாம், இதனால் விஜய் தன் மகன் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்று அவரை நினைத்து மிகவும் சோகத்தில் உள்ளதாக பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சினிமாவில் அதிகம் ஆர்வம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் விரைவில் சினிமாவிற்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.

ஏனெனில் விஜய்யின் மகன் சஞ்சய் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில விஜய் மகன், விக்ரம் மகன் இணைந்து நடிக்கவிருந்ததாக கூட ஒரு செய்தி கிசுகிசுக்கப்பட்டது.