லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடித்து வெளிவந்த திரைப்படம் “தர்பார்”.
சட்டம் தன் கடமையை செய்யும் என்ற வாக்கியத்திற்கு எதிர்மறை சிந்தனை கொண்டவர் கமிஷனர் ஆதித்ய அருணாசலம் (ரஜினி). அவர் மும்பையில் தலை நிமிர்ந்து நிற்கும் போதைப் பொருள் ஆதிக்கத்தின் தலை எடுக்க தன் மகளான நிவேதா தாமஸ்வுடன் வருகிறார். மும்பையின் தலைசிறந்த தொழில் அதிபரின் மகன் இப்போதை வழக்கில் அருணாசலம் வசம் சிக்குகின்றான். பல சுவாரஸ்யமான காட்சி அமைப்பின் முடிவில் முதல் பாதி முடிகிறது.
முதல் பாதியில் பல காட்சிகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில இடங்களில் ஒப்பனை சரியாக பொருந்தவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இரண்டாம் பாதியில் தன் மகளை கொன்றவனை தேடிக் கொள்கிறார் ஆதித்ய அருணாசலம்.
படத்தின் கதை இதுதான் என கணிக்க முடிந்தாலும் பல இடங்களில் திரைக்கதை மூலம் புதிதாக சொல்லியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
படத்தில் நடிகையாக நயன்தாரா வந்தாலும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் தான்.
இசை படத்தின் சில சரிவுகளுக்கு தூனாக நின்றது.
யோகி பாபு மற்றும் ரஜினி காம்போ கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தது.
பொது மக்களுக்கு முதல் பாதி “சும்மா கிழி” இரண்டாம் பாதி-“கிழி”
தமிழ் ஸ்டார் – 2.75/5