தர்பார் படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுத்தியது என நஷ்டஈடு கேட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் ரஜினியின் அடுத்த படமான ரஜினி168 படத்திற்கு ரஜினி வாங்கும் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூட செய்திகள் வந்தது.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கேயார் அளித்துள்ள பேட்டியில் தர்பார் நஷ்டத்திற்கு முருகதாஸ் வாங்கிய மிக அதிகமான சம்பளம் தான் காரணம் என கூறியுள்ளார்.
முருகதாஸ் 33 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதில் 1 சதவீதம், அதாவது 30 லட்சம், கொடுத்தாலே புதுமுக இயக்குனர்கள் மிக சிறப்பாக படம் எடுப்பார்கள். ஒருகாலத்தில் நல்ல படங்கள் கொடுத்துவந்த முருகதாஸ் ஸ்பைடர் படத்தில் இருந்து நல்ல படம் எதுவும் கொடுக்கவில்லை என விமர்சித்துள்ளார் அவர்.