தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். தனது கடின உழைப்பினால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறியவர்.
கடந்த வருடம் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள், மிக வசூல் சாதனைகளை செய்தது.
மேலும், தற்போது இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரசிகர்களிடையே மிக பெரிய ஏதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சாந்தனு ரசிகர்களுடன் தற்போது நடித்தியுள்ள உரையாடலில் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார்.
மேலும் தீவிர விஜய் ரசிகரான இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சாந்தனு ரசிகர்களுடன் உரையாடுகையில் ரசிகர் ஒருவர் அவரிடம் தலய உங்களுக்கு பிடிக்குமா? கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதலளித்த சாந்தனு “தலய யாருக்கு தான் பிடிக்காது” என கூறியுள்ளார்.