தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது.
கொரோனா அச்சம் முடிந்தவுடன் வலிமை படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக மீண்டும் தொடங்கவுள்ளது. படத்தின் முக்கியமான ஸ்டண்ட் காட்சிகள் படக்குழு எடுக்கவுள்ளதாம்.
இந்நிலையில் அஜித்தின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த படங்களில் ஒன்று பில்லா. இப்படம் உலகம் முழுதும் அஜித்தின் மார்க்கெட்டை அதிகப்படுத்தியது.
இப்படம் அப்பவே சுமார் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாம். அந்த சமயத்தில் இவை மிகப்பெரும் வசூலாக பார்க்கப்பட்டது.
கண்டிப்பாக அஜித்தின் திரைப்பயணத்தை பில்லாவுக்கு முன் பின் என பிரிக்கலாம்.