அஜித் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் கொரொனா பாதிப்பு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் சில தினங்களில் அஜித்தின் பிறந்தநாள் வரவுள்ளது, அதற்காக ரசிகர்கள் ஸ்பெஷல் டிபி ஒன்றை தயார் செய்தனர்.
அதை 13 திரைப்பிரபலங்கள் வெளியிட இருந்தனர், ஆனால், அஜித் தரப்பிலிருந்து நடிகர் ஆதவ் கண்ணதாசனை தொடர்புக்கொண்டு கொரொனா சமயத்தில் இதெல்லாம் வேண்டாம் என்று கோரிக்கை வைக்க, அவரும் வெளியிட மாட்டேன் என கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து பலரும் அஜித்திற்காக வெளியிடாத நிலையில், சில பிரபலங்கள் அஜித் காமென் டிபியை ப்ரோபைலில் வைத்தனர்.
இதில் யாரும் எதிர்ப்பாரத விதமாக முன்னணி இசையமைப்பாளர் இந்த காமென் டிபி வைத்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.