Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் தற்போதைய நிலை இது தான், அவர் குறித்த உண்மை தகவல் இதோ

thalapathy vijay son sanjay

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். 6லிருந்து 60 வரை எல்லோரும் கொண்டாடும் ஒரு நடிகராக விஜய் இன்று வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் விஜய் தற்போது கொரோனாவால் சென்னையில் தான் இருந்து வருகிறார். இவரின் மாஸ்டர் படம் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வெளிவரும் என கூறப்படுகிறது.

தற்போது விஜய் மிகவும் சோகத்தில் இருக்கின்றாராம். ஆம், விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படித்து வருகிறார்.

கொரோனாவால் சஞ்சய் அங்கேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளதாம், இதனால் விஜய் தன் மகன் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்று அவரை நினைத்து மிகவும் சோகத்தில் உள்ளதாக பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

இதுக்குறித்து நம் தளத்தில் கூட அறிவித்து இருந்தோம்.

இந்நிலையில் தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்று விஜய் தரப்பை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதில் சஞ்சய் மிகவும் நலமுடன் உள்ளார், அவர் பாதுகாப்பாக தான் உள்ளார் என்று கூறியுள்ளார்களாம்.