விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது. தளபதி அங்கு வந்துள்ளார் என்று தெரிந்ததில் இருந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர்.
அந்த புகைப்படங்கள், வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம். இந்த படத்தை இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் கைதி.
வித்தியாசமான கதைக்களத்தில் கார்த்தி நடித்த இப்படம் விஜய்யின் பிகில் படத்துடன் தீபாவளிக்கு வெளியானது. தற்போது தான் இயக்கிய கைதி படம் வெற்றிகரமாக 50வது நாளை எட்டியுள்ளதால் சந்தோஷத்தில் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ்.
அவரின் பதிவை அதிகம் ஷேர் செய்து அவருக்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
50-வது நாள், அனைவருக்கும் நன்றி🙏🏻😊 pic.twitter.com/QkVPrU15bH
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 13, 2019