ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘ஏ1’. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.
சந்தானம் படங்களின் வசூலில் சாதனையாக அமைந்தது. சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார். தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் தாதா வேடத்தில் நடிக்கிறார்.