Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணமானதை மறைத்து காதல் லீலை…. நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்

Rashami Desai and Arhaan Khan

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் இந்தி நடிகர் அர்ஹான் கானும் தொலைக்காட்சி தொடர்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ள நடிகை ரஸாமி தேசாயும் பங்கேற்றனர். பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சல்மான்கான், ஏற்கனவே அர்ஹான் கானுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரிய வந்தது. இதனை அறிந்த ரஸாமி தேசாய் அதிர்ச்சியாகி காதலை முறித்துக்கொண்டார். ரஸாமியின் வங்கி கணக்கில் இருந்து அர்ஹான் கான் பணம் எடுத்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஸாமியிடம் அர்ஹான் கான் பணமோசடி செய்ததாக ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரலாக்கினர்.

இந்த நிலையில் பணமோசடி குறித்து ரஸாமி அளித்துள்ள பேட்டியில் “நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளனர். அர்ஹான் கான் எனது பணத்தை எதற்காக என்னுடைய வங்கி கணக்கில் இருந்து எடுத்தார் என்பது தெரியாது. இதன் மூலம் அர்ஹான்கான் எனக்கு ரூ.15 லட்சத்துக்கும் மேல் பணம் தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை அவர் தர மறுக்கிறார். இந்த சம்பவம் என்னை மன ரீதியாக பாதித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

அர்ஹான் கான் கூறும்போது, “ரஸாமியின் நிறுவனத்தில் நானும் பங்குதாரராக இருக்கிறேன். எனது லாபம் மற்றும் கடனை திருப்பி தந்ததன் மூலம் இந்த தொகை எனக்கு வந்து இருக்கலாம்” என்றார்.