தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய் தேவரக்கொண்டா. அவருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.
அவர் நடித்துள்ள World Famous Lover படம் இன்று திரைக்கு வருகிறது. இதற்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி பேசியுள்ளார்.
ஒருகாலத்தில் என்னை சுற்றி இருப்பவர்கலின் காதல் மற்றும் காதல் தோல்விகளை பார்த்து காதல் மீதே எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போதுதான் காதல் என்றால் என்ன என்கிற உண்மையே எனக்கு தெரிகிறது.
ஆனால் நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை என விஜய் தேவரக்கொண்டா தெரிவித்துள்ளார்.