ரெனிகுண்டா படத்தில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். இவர் சமீபத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார். அதில் தனது குடும்பத்துக்கு உதவி தேவைப்படுவதாகவும், இது அஜித்துக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார் என்றும் வீடியோவில் பேசினார். இதையடுத்து நடிகர் லாரன்ஸ், அஜித்திடம் இதை கொண்டு சேர்க்க முயற்சி செய்வதாகவும், அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல பாடலாசிரியருமான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவரின் சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில், தீப்பெட்டி கணேசனின் குடும்பத்திற்கு 2 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கியதோடு, அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல் கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலர் முன் வர வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞர்ளைக் காப்பதும் நமது பொறுப்பு pic.twitter.com/HnuQb02Lcm
— Snehan (@SnehanMNM) April 22, 2020