Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தெலுங்கு படத்தில் சிவகார்த்திகேயன்?

sivakarthikeyan

இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இப்படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் அஜித் நடித்திருந்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அப்படத்திற்கு வக்கீல் சாப் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் அடுத்ததாக நடிக்கும் படத்தை கிரிஷ் இயக்க உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் உள்ளன.