நடிகை ராஷி கண்ணா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.
அதன்பின் சங்கத்தமிழன், அயோக்யா போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
மேலும், நடிகை ராஷி கண்ணா தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.
தற்போது இவர் சைத்தான் கே பச்சா மற்றும் அரண்மனை 3 போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா ஒரு பேட்டியில் நடிகர் அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் “தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்” என்ற கேள்விக்கு “அஜித் சார் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், மேலும் அவர் சிரிப்பதை பார்பதற்காகவே நான் அவர் படங்களை காண்பேன் ” என கூறியுள்ளார்.
