தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்.
விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
நடிகர் அஜித் தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களை பெரிதும் மதிப்பவர்.
அந்த வகையில், அஜித்துடன் வேதாளம் திரைப்படத்தில் லட்சமி மேனனுக்கு அம்மாவாக நடித்த நடிகை சுதா இது குறித்து ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது “ஒரு சிலரை கண்டாலே எழுந்து நின்று மரியாதை செலுத்த தோணும், அந்த மாதிரியான மனிதர் தான் நடிகர் அஜித்.
தன்னை போல் ஒரு சிறிய ஆர்ட்டிஸ்டை அவ்வளவு பெரிய இடத்திலிருக்கும் அஜித் மரியாதை கொடுப்பார். அவரிடம் இருந்து மற்றவர்கள் இந்த பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.