கொரோனவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் இன்ஸ்டகிராம் லைவ் மூலமாக சந்தித்து பேசி கொள்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் இன்ஸ்டாகிராமில் நேரடியாக உரையாடியுள்ளார்.
இந்த உரையாடலில் ‘தல’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ் தோனி அவர்களுக்காக பிராவோ ஒரு சிறப்பு பாடலை இயற்றி வருவதாக ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் தோனியின் வாழ்க்கை வரலாறு, மற்றும் சாதனைகள் குறித்து இந்த சிறப்பு பாடல் உருவாக்க இருப்பதாகவும் நடிகை சன்னி லியோனிடம், பிராவோ தெரிவித்துள்ளார்.
இது கண்டிப்பாக தோனியின் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையும் என்று தெரிகிறது.