தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா.
மேலும் பாலிவுட்டில் கூட தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் என்று கூட கூறலாம்.
இவர் முதன் முறையாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளிவந்த படம் பையா.
தற்போது இப்படத்தின் இயக்குனர் லிங்கு சாமீ பேசுகையில் “பையா படத்தின் பல காட்சிகள் மெயின் ரோட்டில் தான் நடந்தது. அப்போது என்னிடம் caravan கிடையாது, தமன்னா உடை மாற்ற மூன்று பெண்களை புடவையை விரித்து பிடிக்க சொல்லிவிட்டு, அதற்கு இடையே நின்று தான் உடை மாற்றிக்கொண்டு வந்து நடிப்பார்” என கூறியுள்ளார்.