அஜித், நயன்தாரா இருவருக்குமே ஒரு சில ஒற்றுமைகள் உண்டு. அதில் குறிப்பாக இவர்கள் இருவருமே தங்கள் படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட வரமாட்டார்கள்.
இதில் நாம் முன்பே சொன்னது போல் நயன்தாரா தன் படத்தின் ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று அக்ரீமெண்ட் போட்டு தான் நடிக்கவே போகின்றாராம்.
அஜித் நீண்ட வருடங்களாக இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகின்றார், அவர் இதுவரை எண்ணிபார்த்தால் 5 பேட்டி கொடுத்திருப்பார்.
இந்நிலையில் அஜித் இத்தனை நாட்கள் ப்ரோமோஷன் வரவில்லை என்றாலும், இந்த அக்ரீமெண்ட் விஷயம் நயன்தாராவை பார்த்து தான் முடிவு செய்தாராம்.
ஆம், அவரை போலவே அஜித்தும் தற்போது அக்ரீமெண்ட் கையெழுத்து வாங்கி தான் நடிக்க வருவதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் தன் யு-டியுப் சேனலில் தெரிவித்துள்ளார்.
அஜித்-நயன்தாரா இருவரும் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.