Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாரா படத்தில் யாஷிகா

Nayanthara and Yashika Anand

ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை எழுதி நடித்த ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது. எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி, அதில் அவரே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பை கவனிக்கிறார்.

‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.