பிரபல முன்னணி இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து ரெஜினா கசாண்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் சில காரங்களால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. மேலும் இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்றும் செல்வராகவனின் ரசிகர்கள் எதிர்பாத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் “நெஞ்சம் மறப்பதில்லை படம் எப்போ தான் வரும், ப்ளீஸ் சார் கொரானா அட்டேக் பண்றதுக்குள்ள படத்தை பார்க்கணும்” என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா சிரிக்கும் எமோஜி போட்டு, வணக்கத்தை வைத்துள்ளார்.
🤣🤣🤣🙏🙏 https://t.co/QIII1xbodw
— S J Suryah (@iam_SJSuryah) March 16, 2020