Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படங்களை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய விஜய் எதிர்ப்பு?

vijay

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட உள்ளனர். இதனிடையே மாஸ்டர் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் பரவின. இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் அணுகிய போது, ரசிகர்கள் தியேட்டரில் வந்து கொண்டாடுவதற்காக தான் படத்தை எடுத்துள்ளோம், ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய அல்ல என விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.