விஜய்க்கு கதை தயார் செய்து வைத்துள்ளதாகவும், வாய்ப்பு அமைந்தால் அவரை வைத்து இயக்குவேன் என்றும் டைரக்டர் பேரரசு அறிவித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் திருப்பாச்சி, சிவகாசி படங்களில் விஜய் ஏற்கனவே நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது ஷங்கர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் விஜய் படத்தை பாண்டிராஜ் இயக்க வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே தொடர்ச்சியாக அதிரடி கதைகளில் நடித்து வரும் விஜய் அடுத்து கிராமத்து கதையம்சத்தில் கூட்டு குடும்ப பாங்கான படமொன்றில் நடிக்க விரும்புவதாகவும், ஏற்கனவே குடும்ப படங்கள் எடுப்பதில் திறமையானவர் என்று பெயர் வாங்கிய பாண்டிராஜுக்கு விஜயின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. பாண்டிராஜ் கடைசியாக கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களை கிராமத்து குடும்ப பின்னணியில் எடுத்து இருந்தார். 2 படங்களுமே நல்ல வசூல் பார்த்தன.