ஆஸ்கார் விருது பெற்ற ‘பாரசைட்’ கொரிய படம் தமிழில் விஜய் நடிப்பில் வந்த மின்சார கண்ணா படத்தின் காப்பி போல் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது, அப்படியொரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே நான் தேர்வு செய்ததை நினைத்து மகிழ்கிறேன். இந்த பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என தயாரிப்பாளர் தேனப்பன் கூறினார்.
தேனப்பன் அளித்த பேட்டியில் இந்த பிரச்சினை வெளிநாட்டு விவகாரம் என்பதால் அதற்குரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இதுகுறித்த எனது முடிவை விரைவில் வெளியிடுவேன் என்றார். வழக்கு தொடர அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கொரியன் படமான ‘பாரசைட்’ சிறந்த திரைப்படம், வெளிநாட்டு படம், திரைக்கதை, இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கார் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.