Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்

shruti hassan

‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார் பவன் கல்யாண். ஸ்ரீராம் வேணு இயக்கி வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பவன் கல்யாண். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காகத் தயாராகி வருகிறது படக்குழு. இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் பவன் கல்யாணுடன் நடித்துள்ளனர். ‘வக்கீல் சாப்’ என்று பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் பெரும் வைரலானது.

தற்போது இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு மனைவியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தமிழில் வெளியான ‘பிங்க்’ ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார்.