Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் விசு மரணமடைந்தார், அதிர்ச்சியில் திரையுலகத்தினர்

Visu

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் மற்றும் இயக்குனர் விசு.

இவர் தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக தான் களம் இறங்கினார். ரஜினி நடித்த தில்லு முல்லு படத்திற்கு இவர் தான் வசனகர்த்தா.

அதை தொடர்ந்து நடிகராகவும் இயக்குனராகவும் களம் இறங்கினார், அதிலும் இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் என்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர்.

அதோடு சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக வெற்றிக்கரமான தொகுத்து வழங்கி வந்தார்.

இவர் நீண்ட நாட்களாக உடல்நலம் முடியாமல் இருந்துவந்தார். கடந்த சில நாட்களாக மிக மோசமான நிலையில் இருந்தார்.

இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார், இது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.