Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த தனுஷின் அடுத்தப்படத்தின் டீம், நீங்களே பாருங்கள்

Dhanush

தனுஷ் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இவர் நடிப்பில் மே 1ம் தேதி ஜகமே தந்திரம் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சில மாதங்களிலேயே இவர் நடித்து வரும் கர்ணன் படம் வெளிவரவுள்ளது, இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்து வருகின்றார்.

இது மட்டுமின்றி ராட்சசன் ராம், துருவங்கள் பதினாறு கார்த்திக் நரேன், செலவராகவனுடன் ஒரு படம் என தனுஷ் செம்ம பிஸி தான்.

இதில் செல்வராகவன் இயக்கும் படம் புதுப்பேட்டை 2வாக தான் இருக்கும் என்று அவரே கூறியுள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை.

இதனால், கண்டிப்பாக தனுஷ் அடுத்தப்படத்தின் வாய்ப்பை கொடுக்க மாட்டார் என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால், கார்த்திக் நரேன் எல்லோருக்கும் பதிலடி தரும் வகையில், தன் அடுத்தப்படத்திற்கு மலையாள எழுத்தாளர்களுடன் அமர்ந்து பேசி வருவதை புகைப்படமாக தன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் தனுழ்ஹ் கண்டிப்பாக அடுத்து கார்த்தி நரேன் இயக்கத்தில் தான் நடிக்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது.