தெலுங்கில் தற்போது மிக பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர்களில் விஜய் தேவராகொண்டவுன் ஒருவர்.
இவர் முதன் முதலில் தெலுங்கில் வெளிவந்த பெல்லி சூப்புலு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.
ஆனால், இவர் நடித்து வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தான் இவருக்கு தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை தேடித்தந்தது.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த வேர்ல்ட் பேமஸ் லவ்வர் திரைப்படம் கூட ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை என்று கூட கூறலாம்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தேவராகொண்ட தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடந்து வரும் பொழுது எதிர்பாராத விதமாக தட்டு தடுமாறி விழுவது போல் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. ஆனால் அவருடன் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்து விட்டார்கள்.
இதோ அந்த வீடியோ…
#VijayDevarakonda slipped his leg at shooting spot pic.twitter.com/bnotEia5D9
— Shruthi HDL (@Baskar_09) March 6, 2020