Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போலீசாருக்கு 3 வேளை உணவு…. ஓய்வெடுக்க தனது 8 ஓட்டல்களை வழங்கிய பிரபல இயக்குனர்

Rohit Shetty

கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். அதேபோல் பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்கினார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் பாதுகாக்கும் காவல்துறையினருக்கு பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவர் தனது 8 ஓட்டல்களை போலீசாருக்காக வழங்கியிருக்கிறார். இது குறித்த தகவலை மும்பை காவல்துறை அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறது.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது: “பாதுகாப்பு பணியில் இருக்கும் எங்களது காவலர்களுக்காக மும்பையில் உள்ள 8 ஓட்டல்களை வழங்கியிருக்கிறார் ரோஹித் ஷெட்டி. போலீசார் ஓய்வெடுக்க, குளிக்க மற்றும் அவர்களுக்கான ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். நல்லெண்ணத்துடன் எங்களுக்கு உதவிய அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.