கொரோனா தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் காவல்துறையும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த விதமாக கேரள காவல்துறை மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சினிமா பிரபலங்களையும் உதவிக்கு அழைத்து கொள்கின்றனர்.
தமிழில் பிசாசு உள்ளிட்ட சில படங்களில் நடித்த மலையாள நடிகை பிரயாகா மார்டின் கேரள போலீசுக்கு உதவும் விதமாக அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பிரயாகா மார்ட்டின்.