கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர்.
நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் வீட்டில் இருந்து என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியும் உற்சாகப்படுத்தியும் வருகின்றனர். இ
இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கௌரவ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விடும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இயக்குநருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Director’s cut , busy with Sanjit pic.twitter.com/py9MndaOaa
— Gaurav narayanan (@gauravnarayanan) March 31, 2020