தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் மணிரத்னம். எந்த பிரச்னையிலும் தனது தனிப்பட்ட கருத்துகளை சொல்லாதவர். தனது படம் வெளியாகும் சமயத்தில் மட்டுமே பேட்டியும் கொடுப்பார். அதில் நாட்டு நடப்பு பற்றி கேள்வி கேட்டால் மட்டுமே அவர் பதில் சொல்வார்.
எப்போதும் சீரியசாக இருப்பார் என்று மணிரத்னம் பற்றி சொல்லப்படுவது உண்டு. அவரது இயக்கத்தில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்தவர் அதிதி ராவ். பார்ட்டி ஒன்றில் மணிரத்னத்துக்கு ஸ்டைலாக ரோஜாப்பூவை கொடுக்கிறார் அதிதி. அதை வாங்கிக்கொண்டு அதிதியை பார்த்து ரொமான்டிக்லுக் விடுவது போல் போஸ் தருகிறார் மணிரத்னம்.
இந்த போட்டோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா. அத்துடன் முதல் முறையாக சூப்பர் சீரியஸ் ஆளான மணி ரத்னம் வெட்கப்படுவதை நான் பார்க்கிறேன் என கமென்ட் போட்டு கலாய்த்துள்ளார்.
First time I ever saw the super serious Mani Ratnam blushing 😍 pic.twitter.com/P5RpLglPgv
— Ram Gopal Varma (@RGVzoomin) April 7, 2020